| 245 |
: |
_ _ |a தேவிப்பட்டினம்-நவக்கிரக திருக்கோயில் - |
| 246 |
: |
_ _ |a நவக்கிரகக் கோயில், நவபாஷனக் கோயில், உலகமாதேவிப்பட்டினம் |
| 520 |
: |
_ _ |a இந்தக் கோவிலுக்கு நவபாஷனக் கோவில் என்று ஓர் பெயரும் உள்ளது. (பாஷனம் - கல்). இங்கு நவதானியங்களை கொண்டு மக்கள் பூஜை செய்கின்றனர். அமாவாசை தினங்களில் ஏராளமானோர் குவிந்து அவர்களின் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகின்றனர். இராமருக்கு சனி தோஷம் நீங்கியதால், இங்கு வழிபட்டால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். மேலும் இந்தக் கோவில் மூதாதையர்களை வழிபட மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது. |
| 653 |
: |
_ _ |a கோயில், தேவிப்பட்டினம், இராமநாதபுரம், திலகேஸ்வரர் கோயில், நவக்கிரகம், இராமர், உப்பூர், உலகமாதேவிப்பட்டினம், சைவம், வைணவம், இராமேஸ்வரம் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.6-ஆம் நூற்றாண்டு / பாண்டியர், சேதுபதி |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகத் தலமாகும். இராமரால் நிர்மாணிக்கப்பட்டு வழிபடப்பட்டதாக நம்பப்படுகிறது. |
| 914 |
: |
_ _ |a 9.48065592 |
| 915 |
: |
_ _ |a 78.89865889 |
| 916 |
: |
_ _ |a திலகேஸ்வரர் |
| 918 |
: |
_ _ |a செளந்தரநாயகி |
| 923 |
: |
_ _ |a தேவிப்பட்டினம் தீர்த்தம் |
| 926 |
: |
_ _ |a நவக்கிரகங்களின் பெயர்ச்சி |
| 927 |
: |
_ _ |a உலகமாதேவிப்பட்டினம் என்பது பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுள் ஒன்று. இது கி.பி. 875 - 1368 வரை அதிகம் அறியப்பட்டத் துறைமுகமாக விளங்கிற்று. முற்காலப் பாண்டியர் காலத்தில் இது இளங்கோமங்கலம் எனவும் அக்காலத்தில் இது அகநாடுகளுள் ஒன்றான செவ்விருக்கை நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்தது. தற்போது இது திருவாடானை வட்டம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் பாண்டியனின் மனைவியின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது. இன்று தேவிப்பட்டினம் என்றழைக்கப்படும் இவ்வூர் முன்பு உலகமாதேவிப்பட்டினம் என்றழைக்கப்பட்டதாக 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் உள்ளது. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a நவக்கிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளன. கடற்கரையில் திலகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. |
| 930 |
: |
_ _ |a ஸ்ரீராமபிரான் எழுப்பிய கோவிலாகும் இது. ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக்கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர். பொங்குமாகடலில் "இந்த இடத்தில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்!' எனப் பெருமாளிடம் வேண்டுகிறார் இராமன். அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைக்கிறார் ஆதி ஜகந்நாதப் பெருமாள். அந்த் திருத்தலம்தான் தேவிப்பட்டினம். இராமநாதபுரத்திலிருந்து பதினைந்து கி.மீ. தூரம். இராமர், உப்பூரில் வெயில் உகுந்த பிள்ளையாரை பூஜை செய்துவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குச் சொல்லப்படுகிறது. "சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் செல்வதற்கு உமக்கு நவக்கிரக தோஷம்தான் காரணம். அதனை நீக்க, கடல் நடுவே மணலால் நவக்கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!' என்றது அசரீரி. இராமரும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்குகிறார். அப்போதுதான் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார். மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறிப் போகிறது. கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்து நின்று போகின்றன. தேவிப்பட்டினம் நவபாஷனம் என்பதும், கடலுக்குள் நவக்கிரக சன்னிதி என்பதும் இதுவே. இந்த இடத்தில்தான் ராமர் சனிதோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு. இந்த கோவிலின் அருகே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. |
| 932 |
: |
_ _ |a கடலுக்குள் நவக்கிரகங்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a திருப்புல்லாணி, இராமேஸ்வரம், நாகநாதர் கோயில், இராமநாதபுரம் அரண்மனை, தனுஷ்கோடி, சேதுபாலம், பாம்பன்பாலம் |
| 935 |
: |
_ _ |a தேவிப்பட்டினம் இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், சிவகங்கையில் இருந்து 47 கி.மீ தொலைவிலும் உள்ளது. தேவிப்பட்டினத்திற்கு உச்சிப்புளி, கல்லுக்கடை, இராமேஸ்வரம், இராமநாதபுரம் போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
| 937 |
: |
_ _ |a தேவிப்பட்டினம் |
| 938 |
: |
_ _ |a இராமநாதபுரம் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a இராமநாதபுரம் நகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000154 |
| barcode |
: |
TVA_TEM_000154 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000154/TVA_TEM_000154_தேவிப்பட்டினம்_நவக்கிரகக்கோயில்-001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000154/TVA_TEM_000154_தேவிப்பட்டினம்_நவக்கிரகக்கோயில்-001.jpg
TVA_TEM_000154/TVA_TEM_000154_தேவிப்பட்டினம்_நவக்கிரகக்கோயில்-002.jpg
TVA_TEM_000154/TVA_TEM_000154_தேவிப்பட்டினம்_நவக்கிரகக்கோயில்-003.jpg
|